துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
நடிகை சமந்தா மயோசிடிஸ் எனும் தசைனார் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு, அவதிப்படுகிறார். ஆனால் அதுபற்றி பொதுவெளியில் அதிகம் பேசிக்கொள்ளாத சமந்தா படப்பிடிப்பு மற்றும் அது தொடர்பான வேலைகளில் இருந்து சில நாட்கள் ஒதுங்கி ஓய்வெடுத்து வந்தார். சில வாரங்களுக்கு முன்பு அவர் நடித்த யசோதா திரைப்படம் வெளியான நிலையில், அடுத்ததாக அவர் நடித்து சாகுந்தலம் என்கிற திரைப்படம் விரைவில் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
இந்த படத்தை பிரபல இயக்குனர் குணசேகர் இயக்கியுள்ளார். அதிதி பாலன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் சமந்தா பழைய சுறுசுறுப்புடன் பணிக்கு திரும்பியுள்ளார். அந்தவகையில் தற்போது சாகுந்தலம் படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கி உள்ளார் சமந்தா. இதுகுறித்த தகவலை வெளிப்படுத்தியுள்ள, “கலை தான் நம்மிடம் உள்ள அனைத்து வருத்தங்களையும் நோய்களையும் குணப்படுத்தும் ஒன்று” என்று கூறியுள்ளார்.