மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட நடிகை சமந்தா மீண்டும் சமூக வலைத்தளங்களில் பிஸியாகிவிட்டார். கடந்த சில நாட்களாக தொடர்ந்து பதிவுகளை போட்டு வருகிறார். இன்று 'சாகுந்தலம்' படம் பற்றிய ஒரு பதிவிட்டுள்ளார்.
அதில், “சாகுந்தலம்' படத்தில் நடக்கும் போதும், பேசும் போதும், ஓடும் போதும். ஏன் அழும் போது கூட ஒரு நயத்தையும், தோரணையையும், கடைபிடிப்பது கடினமாக இருந்தது. நயமாக இருப்பதென்பது எனக்கானதல்ல. அதற்காக பயிற்சி எடுக்க வேண்டியிருந்தது,” என்று பயிற்சியில் எடுத்த போட்டோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.
குணசேகர் இயக்கத்தில் சமந்தா, தேவ் மோகன் மற்றும் பலர் நடிக்கும் 'சாகுந்தலம்' சரித்திரப் படம் பான் இந்தியா படமாக பிப்ரவரி 17ம் தேதி வெளியாக உள்ளது.