தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
விஜய் நடித்த வாரிசு படத்தில் வில்லன்களில் ஒருவராக நடித்திருந்தார் கணேஷ் வெங்கட்ராம். முகேஷ் என்கிற தொழில் அதிபராக நடித்திருந்தார். படத்தை பார்த்து விட்டு பல தொழில் அதிபர்கள் அவரை நிஜமான தொழில் அதிபர் என்று நினைத்து வாங்க பழகலாம் என்று அழைத்தார்களாம்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: படத்தில் தொழில் அதிபராக நடித்ததால், நிஜ தொழில்துறையைச் சேர்ந்த பலர் என்னை அழைத்தார்கள். அவர்கள் அனைவரும் என்னுடன் பேசி பழக ஆர்வம் காட்டினார்கள். என்னை வேறு பரிமாணத்தில் பார்த்தார்கள், ஒரு நடிகராக அது எனக்கு மிகவும் முக்கியமானது என்று நினைக்கிறேன்.
நான் தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாள மொழித் திரைப்படங்களில் பல்வேறு பாத்திரங்களில் நடித்திருந்தாலும், தமிழில் போலீஸ் பாத்திரங்கள் அல்லது ஜென்டில்மேன் போன்ற கதாபாத்திரம் தாண்டி என்னைப் நடிக்க வைக்க யாரும் முன்வரவில்லை என்று நான் எப்போதும் ஆச்சரியப்பட்டு இருக்கிறேன். அது இப்படத்தில் நிறைவேறியது.
ஒரு நடிகராக எனது பயணம் எப்போதும் ஒவ்வொரு முறையும் என்னுடைய வெவ்வேறு அம்சங்களைப் பரிணமித்து வெளிப்படுத்துவதாக இருந்தது. அதிர்ஷ்டவசமாக, வாரிசுக்குப் பிறகு வித்தியாசமான வேடங்கள் எனக்கு வழங்கப்படும் என்று நான் நம்புகிறேன். அதற்காக நானும் முயற்சிப்பேன். என்கிறார் கணேஷ் வெங்கட்ராம்.