ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! |
சமீபத்தில் கேரளாவில் நடந்த கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் அபர்ணா பாலமுரளி, வினீத் ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட ‛தங்கம்' படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். சட்டக் கல்லூரியில், அபர்ணாவை வரவேற்க ஒரு மாணவர் மேடைக்கு அழைக்கப்பட்டார். அமர்ந்திருந்த அபர்ணாவிடம் கை குலுக்கிய அவர், பின்னர் அபர்ணாவை எழுந்திருக்க சொல்லி, அவர் தோள் மீது கை வைக்க முயற்சித்தார்.
மாணவரின் இந்த செயலால் அதிர்ச்சியடைந்த அபர்ணா, அங்கிருந்து விலகினார். அந்த மாணவர் பின்னர் மேடைக்கு வந்து மன்னிப்பு கேட்டதோடு, தான் ஏன் அவ்வாறு நடந்துக் கொண்டேன் என்பதற்கான விளக்கத்தை தெரிவித்த நிலையில், மேடையில் இருந்த கல்லூரி நிர்வாகிகள் யாரும் மாணவரின் நடத்தையை கண்டிக்கவில்லை. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அபர்ணாவுக்கு தங்கள் ஆதரவை தெரிவிக்கும் ரசிகர்கள், கல்லூரியை கண்டித்தும் வருகிறார்கள்.
ஒருவரைத் தொடுவதற்கு முன் அவரை தனிப்பட்ட முறையில் நீங்கள் அறிந்தவராக இருக்க வேண்டும் என்றும், இந்த கல்லூரி மாணவர் சூழ்நிலையைப் பயன்படுத்த முயன்றார் எனவும் ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதோடு, ஒருவரின் தோளில் கை வைப்பது அந்தரங்கமான செயல் என்றும், அதே பாலினத்தைச் சேர்ந்த அந்நியர் இதைச் செய்தால் கூட, சங்கடமான தருணமாக மாறும் என்றும் குறிப்பிட்டனர்.