அரை சதத்தை தொட்ட மகேஷ் பாபு ; சிரஞ்சீவி, ஜூனியர் என்டிஆர் வாழ்த்து | கணவரை பிரிந்து தாய் வீட்டிற்கு வந்த சின்ன குஷ்பூ நடிகை | நீரும் நெருப்பும், ராஜாவின் பார்வையிலே, வேலையில்லா பட்டதாரி-2 - ஞாயிறு திரைப்படங்கள் | இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் |
கடந்த, 1984ல் தாயம் என்ற கதையை மையமாக வைத்து ஆளவந்தான் படத்தின் திரைக்கதையை உருவாக்கினார் கமல்ஹாசன். கதை, திரைக்கதை, வசனம், நடிப்பு என அனைத்திலும் மிரட்டியிருப்பார் கமல். சுரேஷ் கிருஷ்ணா இயக்கினார் என்றாலும், கமலின், டச்தான் படம் முழுதும் இருக்கும். மனிஷா கொய்ராலா, ரவீனா டாண்டன், சரத்பாபு, அனுஹாசன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
தமிழ், ஹிந்தி என இரு மொழிகளில் இப்படம் உருவானது. இப்படத்தில் இடம் பெற்ற, 2டி அனிமேஷன் காட்சிகள், பெரும் பாராட்டுக்களை பெற்றது. தயாரிப்பாளர் தாணு முதலில், 7 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இப்படத்தை துவங்கினார். ஆனால் இப்படம், 20 கோடி ரூபாயில் முடிந்தது. அன்றைய காலக்கட்டத்தில், இப்படம் பெரும் தோல்வியை தழுவியது.
இந்நிலையில் புதிய டிஜிட்டல் ஒலி அமைப்பில் ஆளவந்தான் படத்தை தாணு விரைவில் வெளியிடப்போவதாக அறிவித்துள்ளார் . உலகம் உழுவதும் கிட்டத்தட்ட 1000 திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ளது.