கவர்ச்சியாக நடித்தவர் கடவுளாக நடிக்கலமா? : துர்க்கை ஆக நடித்த கஸ்துாரி பதில் | மலையாளம் பிக்பாஸ் 7ல் பங்கேற்ற ஹிந்தி பிக்பாஸ் 9 போட்டியாளர் | லோகேஷ் கனகராஜின் புரமோஷன் பேட்டிகள் ; ஜாலியாக கிண்டலடித்த ரஜினிகாந்த் | மகேஷ்பாபுவை அடுத்து மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறந்த ரவி தேஜா | தனி நபர்களை வைத்து படப்பிடிப்பு : தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை அறிக்கை | வாழ்த்து சொன்ன மோகன்லால் ; சந்திக்க நேரம் கேட்ட ஷாருக்கான் | பழம்பெரும் நடிகர் பிரேம் நசீர் மகன் ஷானவாஸ் காலமானார் | தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா |
'அசுரன்' படத்திற்குப் பிறகு விடுதலை திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாகவும் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடித்து வருகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் கவுதம் மேனன், பிரகாஷ் ராஜ், ஆகியோர் நடித்துள்ளனர். ஜெயமோகனின் 'துணைவன்' சிறுகதையை மையமாக கொண்டு இப்படம் உருவாகி வருகிறது. இளையராஜா இசை அமைத்துள்ளார் .
சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றது. இந்நிலையில் இப்படத்தின் டப்பிங் பணிகள் துவங்கி உள்ளன. இந்த தகவலை படக்குழுவினர் புகைப்படங்களுடன் பகிர்ந்துள்ளனர். இப்படத்தை வரும் மார்ச் 31ம் தேதி ரெட் ஜெயண்ட் நிறுவனம் தமிழில் பிரம்மாண்டமாக வெளியிட முடிவு செய்துள்ளது.