படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

வெற்றிமாறன் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், சூரி, விஜய் சேதுபதி மற்றும் பலர் நடிக்கும் 'விடுதலை' படத்தின் முதல் சிங்கிளான 'உன்னோட நடந்தா' பாடல் நாளை பிப்ரவரி 8ம் தேதி வெளியாக உள்ளது. இப்பாடலை எழுத்தாளரும் திரைப்பட இயக்குனருமான சுகா எழுதியுள்ளார். சுகா, வெற்றிமாறன் ஆகியோர் மறைந்த இயக்குனர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனர்களாகப் பணியாற்றியவர்கள்.
'உன்னோட நடந்தா' பாடல் எழுதிய அனுபவத்தைப் பற்றி சுகா அவரது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளதாவது,
உன்னோட நடந்தா . . .
வெற்றி மாறன் அழைத்தான்.
'அண்ணே! உங்களை ஒருத்தர் பாக்கணுமாம். உடனே கிளம்பி வாங்க.'
'யாருடா?' அசட்டையாகக் கேட்டேன்.
சிரிப்பை அடக்கிக் கொண்டு பெரியவர் பேரைச் சொன்னான். அருகில் அவரது சிரிப்புச் சத்தம் கேட்டது.
'அடேய்' என்றபடி போனை வைத்துவிட்டு ஓடினேன்.
'இப்படி கூப்பிட்டாதான் வருவே இல்ல!?' என்றபடி வரவேற்றார்.
'விடுதலை' படத்திற்காக ஒரு பாடல் எழுத அழைக்கப்பட்டிருக்கிறேன் என்பது அப்போதுதான் தெரிந்தது.
'எனக்கு பாட்டு எழுதத் தெரியாதே ஸார்' என்றேன்.
'நீ எழுதுய்யா. அதுதான் பாட்டு'.
வெற்றிமாறனைத் தனியாக அழைத்து சூழல் என்னவென்று கேட்டேன். அப்போதுதான் அவன் கூடுதலாக இந்தத் தகவலைச் சொன்னான்.
'சுகாவைக் கூப்பிடுவோம். மாட்டேன்னுதான் சொல்லுவான். ஆனா எழுத வச்சுடலாம். இளையராஜா வெற்றிமாறன் சுகான்னு நம்ம பேமிலி நேம்ஸ் இருந்தா நல்லா இருக்கும்' என்றாராம், பெரியவர்.
'பேப்பரும், பேனாவும் குடுடா' என்று வெற்றியிடம் கேட்டு வாங்கிக் கொண்டு பெரியவர் முன் அமர்ந்து சில வரிகள் எழுதிக் கொடுத்தேன்.
'ஓ ! Phrases ஆ எழுதிட்டியா?'
'ஆமா ஸார். எனக்கு இப்படித்தான் எழுத வருது. நீங்கதான் இதைப் பாட்டா மாத்திக்கணும்'.
மாற்றினார். பாடினார். அதற்குப் பிறகு தனுஷைப் பாட வைத்தார். வணங்கினேன். விடைபெற்றுக் கொண்டேன். நாளை பாடல் வெளியீடு.
எனக் குறிப்பிட்டுள்ளார்.
இளையராஜா இசையில் தனுஷ் பாடும் இந்தப் பாடல் வெளியீட்டிற்கு முன்பாகவே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.