ரஜினியின் ‛கூலி' படத்தின் பத்து நாள் வசூல் வெளியானது! | பிளாஷ்பேக்: அபூர்வ கலைப் படைப்பாக வந்து, ஆச்சர்யமிகு வெற்றியைப் பதிவு செய்த “அஞ்சலி”யின் அனுபவ ஞாபகங்கள் | ‛பாகுபலி தி எபிக்' படம் குறித்து ராஜமவுலி வெளியிட்ட தகவல்! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் தியேட்டர் உரிமை குறித்த தகவல் வெளியானது! | 63வது பிறந்த நாளை கொண்டாடிய ராதிகா! | 'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி |
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியாகி பரபரப்பான வெற்றியை பெற்ற படம் 'லவ் டுடே'. 9 கோடியில் தயாரான இந்த படம் 80 கோடி வசூலித்து சாதனை படைத்தது. செல்போனை மாற்றிக் கொள்வதால் காதல் ஜோடிகளுக்குள் வரும் பிரச்சினையை மையமாக வைத்து இந்த படம் உருவானது.
ஜெயம்ரவி நடித்த 'கோமாளி' படத்தை இயக்கி பிரதீப் ரங்கநாதன் இந்த படத்தை இயக்கி நடித்திருந்தார். சத்யராஜ், இவானா, ரவீனா ரவி, யோகிபாபு, ராதிகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார், தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்திருந்தார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 4ம் தேதி வெளியான இந்த படம் இன்று (பிப்.11) 100வது நாளை தொட்டுள்ளது. தயாரிப்பு நிறுவனத்திற்கு சொந்தமான வில்லிவாக்கம் ஏஜிஎஸ் தியேட்டரிலும், அண்ணாநகர் பிவிஆர் தியேட்டரிலும் தொடர்ந்து 100 நாள் ஓடியிருக்கிறது. தமிழ்நாடு முழுக்க இரண்டாவது ரவுண்ட் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது.