துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
கடந்த வருடம் ஜனவரி மாதம் மலையாளத்தில் வினீத் சீனிவாசன் இயக்கத்தில் மோகன்லாலின் மகன் பிரணவ் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன், தர்ஷனா ராஜேந்திரன் ஆகியோர் இணைந்து நடித்த ஹிருதயம் என்கிற திரைப்படம் வெளியானது. முழுக்க முழுக்க காதல் படமாக உருவாகியிருந்த இந்த படம் கடந்த வருடம் மலையாளத்தில் வெளியான படங்களில் முதல் படமாக 50 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை செய்தது.
இந்த நிலையில் தற்போது வரும் பிப்ரவரி 14ம் தேதி இந்த படம் காதலர் தினத்தை முன்னிட்டு குறிப்பிட்ட சில திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. இந்த தகவலை இந்த படத்தின் தயாரிப்பாளர் வைசாக் சுப்ரமணியன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதேபோல பிரேமம், விண்ணைத்தாண்டி வருவாயா, மின்னலே, டைட்டானிக் ஆகிய படங்களும் காதலர் தினத்தன்று ரீ-ரிலீஸ் செய்யப்பட இருக்கின்றன.