தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

தாய் திரையரங்கம் சார்பில் எஸ்.அருண் விக்னேஷ் மற்றும் ஆர்.வேல் முருகன் இருவரும் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் துச்சாதனன். படத்தின் நாயகனாக விகாஸ் நடிக்கிறார். இவர் அகிலா, என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா, ஒற்றாடல் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக புதுமுகம் ரோகிணி நடிக்கிறார். இவர்களுடன் லொள்ளு சபா மனோகர், மில்டன் மேடிசன், பிரபு சாஸ்திரி, வேளாங்கண்ணி, சாய் ரோஹிணி, அருண் விக்னேஷ், மில்டன் மேடிசன், விக்னேஷ் வி.எஸ். சரவணன் நடிக்க உள்ளனர். தளபதி இயக்குகிறார், பாலமுருகன் ஒளிப்பதிவு செய்கிறார், விஜய் பிரபு இசை அமைக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் தளபதி கூறியதாவது: பாஞ்சாலியின் துகிலை உரித்தவன் மட்டும் துச்சாதனன் இல்லை. மற்றவர்களுக்கு ஏற்படும் அவமானம், இழப்பு போன்ற எதையும் சிந்திக்காமல் தன் சுயநலத்துக்காக மற்றவர்களின் உடைமை, உரிமை, உயிர் போன்றவற்றை உரியும் அனைவரும் துச்சாதனன்தான். அப்படிப்பட்ட சுயநலவாதியின் கதைதான் இந்த துச்சாதனன். ஒரு நகைக்கடையில் கொள்ளை நடக்கிறது. அதை யார் செய்தார்கள் என்று கண்டுபிடிக்க காவல்துறை களம் இறங்குகிறது. அதன் பின்னர் நடக்கும் சுவாரஸ்யமான திருப்பங்களை, விறுவிறுப்பான திரைக்கதை மூலம் சொல்லும் படம். என்றார்.