23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் | கணவர் கிரிஷ் உடன் பிரிவா... : நடிகை சங்கீதா மறுப்பு | தீபாவளி மாதத்தில் வெளியாகும் அனிமேஷன் படம் | பிளாஷ்பேக்: கமர்ஷியல் ஆக்ஷன் படம் இயக்கிய விசு | முகபருவிற்கு உமிழ்நீர் மருந்து என்கிறார் தமன்னா | 90வது பிறந்த நாளை கொண்டாடிய எம்.என்.ராஜம் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்திற்கு பாதுகாப்பு கேட்டு மனு | பிளாஷ்பேக் : இயக்குனராக, தயாரிப்பாளராக தோற்ற டி.ஆர்.மகாலிங்கம் |
நடிகர் சூர்யா முதல் முறையாக இயக்குனர் சிறுத்தை சிவா உடன் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகிறார். சூர்யாவின் 42 வது படமாக உருவாகும் இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். பாலிவுட் நடிகை திஷா பதானி நாயகியாக நடிக்கிறார். நிகழ் காலம் மற்றும் பீரியட் படமாகவும் உருவாகிறது.
சூர்யா 10க்கும் மேற்பட்ட வித்தியாசமான தோற்றங்களில் நடிக்கவுள்ளார். வரும் மார்ச் 03-ம் தேதி படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. தற்போது இந்த படத்தை 2024 பொங்கல் அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் டிஜிட்டல் உரிமைகள் மிகப்பெரிய விலைக்கு விற்கபட்டுள்ளதாகவும் படக்குழு சார்பில் கூறுகிறார்கள்.