ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
'பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் படங்களை தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு முன் மோகன் ஜி இயக்கத்தில் வெளியான படம் ‛பகாசூரன்'. செல்வராகவன், நட்டி எனும் நட்ராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கலவையான விமர்சனங்களை இந்தப்படம் பெற்றது. இந்நிலையில் தனது அடுத்தப்பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார் மோகன் ஜி.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவு : “இவர் யார் எனத் தெரிகிறதா? காசி கங்கா ஆர்த்தியின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது. எல்லா கடவுள்களையும் வணங்குபவர் ரிச்சர்ட் ரிஷி. அப்புறம், முக்கியமான செய்தி... என்னோட அடுத்த படத்தின் கதாநாயகன் ரிச்சர்ட் தான். அறிவிப்பு விரைவில்...” என்று பதிவிட்டுள்ளார்.
நடிகர் அஜித்தின் மைத்துனரான ரிச்சர்ட் ரிஷி ஏற்கனவே மோகன்ஜி இயக்கத்தில் வெளியான ‛திரெளபதி, ருத்ர தாண்டவம்' படங்களில் நாயகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.