டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

இயக்குனர் செல்வராகவன் கடைசியாக இயக்கிய படம் நானே வருவேன். இந்த படத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்து இருந்தார். தற்போது திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த பகாசூரன் திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படம் தனுஷ் நடித்த வாத்தி படத்துடன் அதே தேதியில் ரிலீஸானது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தபோதிலும் செல்வராகவனின் நடிப்பு பேசப்பட்டது.
இந்நிலையில் நேற்று செல்வராகவன் பிறந்தநாளை ஒட்டி பல திரை பிரபலங்கள் அவருக்கு வாத்துகளை தெரிவித்தனர். செல்வராகவன் தனது பிறந்தநாளை தன் அப்பா, அம்மா, மனைவி, தங்கைகள், தம்பி என தனது குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார். இந்த புகைப்படத்தை அவரது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் செல்வராகவன். இந்த புகைப்படங்கள் வைரலானது.