துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
2003ல் வெளிவந்த 'அன்பு' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் பாலா. இவர் இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பி. தொடர்ந்து 'காதல் கிசு கிசு, அம்மா அப்பா செல்லம், கலிங்கா' உள்ளிட்ட படங்களில் நடித்தார். 2006ல் 'கலாபம்' என்ற மலையாளப் படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து கடந்த 15 வருடங்களாக பல மலையைளப் படங்களில் நடித்துள்ளார். கேரளாவிலேயே செட்டிலாகிவிட்டார்.
சிவா இயக்கி அஜித் நடித்து வெளிவந்த 'வீரம்' படத்தில் அஜித்தின் தம்பிகளில் ஒருவராகவும் நடித்துள்ளார் பாலா. சிவா இயக்கிய 'அண்ணாத்த' படத்திலும் நடித்தார்.
ஒரு வாரத்திற்கு முன்பு சிறுநீரகப் பிரச்சனை காரணமாக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார் பாலா. அவரை சந்திக்க இயக்குனர் சிவா இன்று கொச்சி சென்றுள்ளதாகத் தெரிகிறது.
2010ல் பின்னணிப் பாடகி அம்ருதா சுரேஷைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார் பாலா. பின்னர் இருவரும் 2019ல் விவாகரத்து செய்து கொண்டனர். 2021ல் எலிசெபத் உதயன் என்ற டாக்டரை மறுமணம் செய்து கொண்டார் பாலா.