ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரபு, விக்ரம் பிரபு, லால், ஜெயராம் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி கடந்தாண்டு வெளியான சரித்திர படம் பொன்னியின் செல்வன். ரூ.500 கோடி வசூல் சாதனை புரிந்த இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஏப்., 28ல் திரைக்கு வருகிறது. தற்போது அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. புரொமோஷன் பணிகள் துவங்கி உள்ளன.
முதற்கட்டமாக ‛அக நக' என்ற முதல் பாடலை மார்ச் 20ல், மாலை 6 மணிக்கு வெளியிடுவதாக அறிவித்துள்ளனர். இளங்கோ கிருஷ்ணன் இந்த பாடலை எழுத, சக்திஸ்ரீ கோபாலன் பாடி உள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதுதொடர்பாக ஒரு போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் வாளை ஏந்திய குந்தவை திரிஷாவிடம் கண்களை கட்டிய படி வந்தியதேவன் கார்த்தி மண்டியிட்டு இருப்பது போன்று உள்ளது. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் இந்த பாடல் வெளியாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டு தனித்தனி போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.