'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் |

பிரபல கன்னட நடிகை பவித்ரா லோகேஷ். தமிழில் அயோக்யா, வீட்ல விசேஷம், கூகுள் குட்டப்பா, கவுரவம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பவித்ரா லோகேஷ் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர்.
இந்த நிலையில் 44 வயதான பவித்ரா, 60 வயது தெலுங்கு நடிகர் நரேசை காதலித்து வந்தார். சமீபத்தில் அவரை திருமணம் செய்து கொண்டார். நரேசுக்கு அது 4வது திருமணம். இந்த நிலையில் பவித்ரா லோகேஷ் திருமணம் குறித்து அவரது முன்னாள் கணவர் சுசீந்திர பிரசாத் கூறியிருப்பதாவது, “பவித்ராவுக்கு சுயநலம் அதிகம், ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்படக் கூடியவர். நரேஷின் தாயார் விஜய நிர்மலா சம்பாதித்து வைத்துள்ள 1500 கோடி சொத்துகளை சுருட்டவே நரேஷை திருமணம் செய்து காதல் நாடகம் ஆடுகிறார். இந்த விஷயம் நரேசுக்கு தெரிய வருவதற்குள் அவரிடம் இருக்கும் சொத்துகள் பறிபோய் இருக்கும்” என்று கூறியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டு பரபரப்பாகி உள்ளது. நரேசின் தாயார் விஜயநிர்மலா பழம்பெரும் நடிகை ஆவார். தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவின் இரண்டாவது மனைவி ஆவார்.