தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

சினிமா மற்றும் சின்னத்திரை நடிகையான சத்யப்ரியா மிரட்டலான பார்வை, அதட்டலான குரலால் வில்லி கதாபாத்திரத்திற்கு பெயர் போனவர். தமிழில் பல முன்னணி படங்களில் நடித்துள்ள இவர், பெரும்பாலும் நெகட்டிவ் ரோல்களில் தான் நடித்திருக்கிறார். தற்போது எதிர்நீச்சல் தொடரில் ஸ்ட்ரிக்ட்டான மாமியார் விசாலாட்சியாக தனது மருமகள்களை அடக்கி ஒடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கலாச்சாரம், பண்பாடு என மருமகள்களை மிரட்டி தனக்கு கீழே வைத்திருக்கும் சத்யப்ரியாவின் நிஜ வாழ்வே வேறு. சத்யப்ரியாவிற்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். இதில் மகன் வெளிநாட்டில் வேலைபார்த்த போது, நியூஜெர்ஸியை சேர்ந்த லாரா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்கள் திருமணத்தை முழுமனதுடன் ஏற்றுக்கொண்ட சத்யப்ரியா, மகன் மற்றும் மருமகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். அண்மையில் சத்யப்ரியா தனது மகன் மற்றும் மருமகனுடன் சேர்ந்து யூ-டியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளார். இதில் அவர் தனது மருமகளை மகளாக பாசம் காட்டுவதை பார்த்து வில்லி விசாலாட்சியா இப்படி? என பலரும் ஆச்சரியப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து சத்யப்ரியாவின் குடும்ப புகைப்படங்களும் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.