தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

மார்ச் மாத கடைசி வாரத்தில் இரண்டு முக்கிய படங்களான சிலம்பரசன் நடித்த 'பத்து தல', சூரி, விஜய் சேதுபதி நடித்த 'விடுதலை' ஆகிய படங்கள் வெளிவந்தன. மார்ச் 30ம் தேதி வெளிவந்த 'பத்து தல' படம் முதல் நாளில் சுமார் 12 கோடி வசூலித்ததாகத் தகவல் வெளியாகின. மார்ச் 31ம் தேதி வெளியான 'விடுதலை' படம் முதல் நாளில் சுமார் 8 கோடி வசூலித்ததாகச் சொல்கிறார்கள்.
'விடுதலை' படத்திற்கான விமர்சனங்களும், வரவேற்பும் அதிகமாக இருந்ததால் அது 'பத்து தல' படத்தின் வரவேற்பையும், வசூலையும் குறைக்க வாய்ப்புள்ளதாக கோலிவுட்டில் சொல்கிறார்கள். சில ஊர்களில் 'பத்து தல' படத்தின் காட்சிகளைக் குறைத்துவிட்டு 'விடுதலை' படத்தின் காட்சிகளை அதிகப்படுத்தியுள்ளதாகச் சொல்கிறார்கள்.
இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதால் 'விடுதலை' படத்தில் வசூல் இன்னும் அதிகமாக இருக்கும் என்கிறார்கள். சூரி கதாநாயகனாக நடித்த முதல் படம் முன்னணி கதாநாயகனாக சிம்பு நடித்த படத்துடன் போட்டி போட்டு முன்னேறி வருவது திரையுலகத்தினரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
படத்தின் கதைதான் எப்போதுமே 'கிங்' என்பதை 'விடுதலை' படம் மீண்டும் புரிய வைத்துள்ளது என்பதுதான் பலரது கருத்தாக உள்ளது.