‛பருத்திவீரன்' புகழ் பாடகி லட்சுமி அம்மாள் காலமானார் | 2026லாவது அஜித் படம் வருமா | அண்ணா சாலை இரும்பு பாலத்திற்கு சிவாஜி பெயர் : ரசிகர்கள் வேண்டுகோள் | 2025ல் தமிழ் சினிமாவில் மறைந்த திரைப்பிரபலங்கள் | ஜனவரி 16ல் ஜூலிக்கு திருமணம்: பல வருட காதலரை மணக்கிறார் | திடீரென மேலாளரை நீக்கிய விஷால் | பிளாஷ்பேக்: பாடல்கள் இல்லாத 'வண்ணக் கனவுகள்' | பிளாஷ்பேக் : ஜெமினி கணேசனுக்கு வில்லனாக நடித்த சிவாஜி கணேசன் | ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் |

ஷங்கர் இயக்கத்தில் கமல், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா உட்பட பலர் நடித்து வரும் இந்தியன் -2 படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது தைவானில் இந்தியன்-2 படப்பிடிப்பு நடைபெறுகிறது. 8 நாட்கள் அங்கு நடைபெற உள்ள படப்பிடிப்பில் ஒரு சண்டை காட்சியை படமாக்கும் இயக்குனர் ஷங்கர், அந்த படப்பிடிப்பை முடித்துவிட்டு தென் ஆப்பிரிக்கா சென்று ஒரு பாடல் மற்றும் ஒரு ஆக்சன் காட்சியை படமாக்கப் போகிறார். தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் படப்பிடிப்பே இந்தியன்-2 படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு என்றும் கூறப்படுகிறது. மேலும் சில தினங்களுக்கு முன்பு, தான் தைவான் சென்றுவிட்ட தகவலை ஒரு புகைப்படத்தின் மூலம் கமலஹாசன் உறுதிப்படுத்தியிருந்த நிலையில், தற்போது இயக்குனர் ஷங்கரும் தைவானில் தான் நின்று கொண்டிருக்கும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார்.