துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
அயன் முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட், அமிதாப் பச்சன் மற்றும் பலர் நடித்து 2022ம் ஆண்டு வெளிவந்த படம் 'பிரம்மாஸ்திரா பார்ட் ஒன் - சிவா'.
சுமார் 400 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இந்தப் படம் பாலிவுட்டின் பெரிய வெற்றிப் படமாக கடந்த ஆண்டு அமைந்தது. அப்படத்தின் இரண்டாம், மூன்றாம் பாகம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை படத்தின் இயக்குனர் அயன் முகர்ஜி வெளியிட்டுள்ளார்.
“முதல் பாகத்தை விடவும் பிரம்மாண்ட அளவிலும், சிறப்பாகவும் உருவாக்க நேரம் தேவைப்படுவதால் அதற்கு கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. இரண்டாம், மூன்றாம் பாகங்களுக்காக ஸ்கிரிப்ட்டை உருவாக்க இன்னும் நேரம் தேவை என்பதை கற்றுக் கொண்டுள்ளேன். இரண்டு பாகங்களையும் ஒன்றாகப் படமாக்க உள்ளேன்,” என்றும் தெரிவித்துள்ளார்.
பிரம்மாஸ்திரா இரண்டாம் பாகம் - தேவ், டிசம்பர் 2026ம் ஆண்டும், பிரம்மாஸ்திரா மூன்றாம் பாகம், டிசம்பர் 2027ம் ஆண்டும் வெளியாகும் என்று அறிவித்துள்ளார். இரண்டாம் பாகத்திற்காக இன்னும் மூனறரை ஆண்டுகள் ரசிகர்கள் காத்திருக்க வேண்டும்.