பிரதமர் மோடி உடன் நடிகர் கமல் சந்திப்பு : கீழடி பற்றி கோரிக்கை | கூலி படத்தில் பிரீத்தி கதாபாத்திரம் கொல்லப்படுகிறதா? : ஸ்ருதிஹாசன் பதில் | இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் | ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் | இந்த வாரம் ஆக்கிரமிக்க போகும் ஓடிடி ரிலீஸ்..! | 'கிங்டம்' படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு | புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி |
மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'மாவீரன்'. இந்த படத்தில் கதாநாயகனாக சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். நாயகியாக அதிதி ஷங்கர் நடிக்க, முக்கிய வேடங்களில் சரிதா, இயக்குனர் மிஷ்கின், யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பரத் ஷங்கர் இசையமைத்து வருகிறார். படம் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற விருது விழா ஒன்றில் மடோன் அஸ்வின் கலந்து கொண்டார். அப்போது மாவீரன் படத்தை பற்றி முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார். அதன்படி "சிவகார்த்திகேயன் நடிக்க வேண்டிய அனைத்து காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் 7 நாட்கள் மட்டுமே மற்ற நடிகர்களின் காட்சி படமாக்கப்பட உள்ளது என தெரிவித்துள்ளார். டப்பிங் மற்றும் எடிட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரை எடுக்கப்பட்டுள்ள காட்சிகள் அனைத்தும், தனக்கும், படக்குழுவிற்கும் மிகவும் பிடித்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.