மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
ஹிந்தி, தெலுங்கில் உருவாகும் மியூசிக்கல் படம் மியூசிக் ஸ்கூல். படத்திற்கு இளையராஜா இசை அமைக்கிறார். ஸ்ரேயா, பிரகாஷ்ராஜ், ஷர்மான் ஜோஷி, ஷான் உள்பட பலர் நடிக்கிறார்கள். கிரண் தபோன்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார், பபா ராவ் பியாலா இயக்குகிறார்.
படம் பற்றி இயக்குனர் கூறியதாவது: இளம் மாணவர்கள் எதிர்கொள்ளும் தற்போதைய கல்வி அழுத்தத்தைக் கூறுவதுடன், பள்ளி குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறது. கல்விச் சாதனைகள் மற்றும் கல்வியல்லாத மற்ற செயல்பாடுகளின் சமநிலையை வலியுறுத்தும் இத்திரைப்படம், மிக முக்கியமான மற்றும் தீவிரமான ஒரு விஷயத்தைப் பொழுதுபோக்கு முறையில் 11 பாடல்களால் அழகாக விவரிக்கிறது. அவற்றில் மூன்று பாடல்கள் இந்திய ரசிகர்களைக் கவரும் வகையில், கிளாசிகல் மியூசிக் முறையில் உருவாகியுள்ளது.
முக்கிய நடிகர்களுடன் இசைப் பள்ளியின் மாணவர்கள் பெஞ்சமின் கிலானி, சுஹாசினி முலே, மோனா அம்பேகன்கர், லீலா சாம்சன், பக்ஸ் பார்கவா, வினய் வர்மா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், வக்கார் ஷேக், பானி ஆகியோருடன் மற்றும் பல குழந்தை நட்சத்திரங்களும் இணைந்து நடித்துள்ளனர். இந்தி தெலுங்கில் தயாராகி உள்ள இந்த படம் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்படுகிறது. வருகிற மே மாதம் 12ம் தேதி வெளியாகிறது. என்றார்