தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
விமல் நடித்து முடித்துள்ள 'தெய்வ மச்சான்' படம் வருகிற 21ம் தேதி வெளிவருகிறது. இந்த படத்தில் விமல் ஜோடியாக நடித்திருப்பர் நேகா என்ற புதுமுகம். தற்போது படத்தின் புரமோசன் பணிகள் நடந்து வருகிறது. இது தொடர்பான நிகழ்ச்சிகள் எதிலும் ஹீரோயின் கலந்து கொள்ளவில்லை.
இதுகுறித்து படத்தின் இயக்குனர் மார்ட்டின் நிர்மல் குமார் கூறியதாவது: நேகா ஆடிசன் மூலம் படத்தின் நாயகியாக தேர்வு செய்யப்பட்டார். அவர் அமெரிக்காவில் டாக்டருக்கு படித்து வந்தார். விடுமுறை காலத்தில் வந்து இந்த படத்தில் நடித்துக் கொடுத்தார். படப்பிடிப்பு முடிந்ததும் மீண்டும் படிப்பை தொடர அமெரிக்கா சென்று விட்டார். தற்போது அவரை அழைத்திருக்கிறோம், விடுமுறை கிடைத்தால் வருவதாக சொல்லியிருக்கிறார். இந்த படம் அண்ணன், தங்கை உறவை புதிய கோணத்தில் சொல்லும் படம். இதில் தங்கையாகவும், விமலின் மனைவியாகவும் நேகா நடித்திருக்கிறார். நேகாவின் கேரக்டர் பேசப்படுவதாக இருக்கும். என்றார்.
இந்த படத்தில் விமல், நேகாவுடன் பாண்டியராஜன், ஆடுகளம் நரேன், பால சரவணன், வேல ராமமூர்த்தி உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். கேமில் ஜே.அலெக்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார், காட்வின் இசை அமைத்துள்ளார். உதய் புரொடக்ஷன், மற்றும் மேஜிக் டச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
மாடலிங் துறையில் இருந்த நேகா, சில விளம்பர படங்களில் நடித்துள்ளார். நினைத்தாலே இனிக்கும் என்ற தொலைக்காட்சி தொடரில் சில காலம் நடித்து விட்டு அதிலிருந்து வெளியேறிவர் என்பது குறிப்படத்தக்கது.