தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
கடந்த வருடம் இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் நடிப்பில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதுமட்டுமல்ல, இந்த படம் நாட்டு நாட்டு பாடலுக்காக கோல்டன் குளோப் மற்றும் ஆஸ்கர் விருது ஆகியவற்றையும் பெற்றது. ஆஸ்கர் போட்டியில் கலந்து கொள்வதற்காகவும் விருதுகளை பெறுவதற்காகவும் 80 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது என ஒரு பரபரப்பு உருவான சமயத்தில் படத்தின் தயாரிப்பாளரான டிவிவி தனய்யா, தான் இதற்காக எந்த செலவும் செய்யவில்லை எனக் கூறி ஒதுங்கிக் கொண்டார். அதன் பிறகு ராஜமவுலியின் மகன் இதற்காக வெறும் எட்டரை கோடி மட்டுமே செலவு செய்யப்பட்டது என ஒரு கணக்கை வெளியிட்டார்.
அதேசமயம் ஆஸ்கர் விருது புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் ஆஸ்கர் விருது பெற்று ஊர் திரும்பிய பின் நடைபெற்ற அந்தப்படம் தொடர்பான நிகழ்வுகளில் எதிலுமே தயாரிப்பாளர் தனய்யா கலந்து கொள்ளவில்லை. படக்குழுவினர் அவருக்கு அழைப்பு அனுப்பினார்களா அல்லது அவர் வர மறுத்து விட்டாரா என்பது குறித்த விபரமும் வெளியாகவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற ராம்சரண் பிறந்தநாள் பார்ட்டி, ஆர்ஆர்ஆர் குழுவினருக்கு தெலுங்கு திரையுலகம் நடத்திய பாராட்டு நிகழ்ச்சி என எதிலுமே இவர் கலந்து கொள்ளவில்லை.. அதற்கான காரணமும் தெரியவில்லை.
இந்த நிலையில் அமேசான் நிறுவனத்தின் சர்வதேச துணைத் தலைவரான ஜேம்ஸ் பாரெல் என்பவர் ஐதராபாத்தில் உள்ள ஜூனியர் என்டிஆர் வீட்டிற்கு விருந்தினராக வருகை தந்தார். அவருக்கு விருந்தளித்து உபசரிக்க ஜூனியர் என்டிஆர் ஏற்பாடு செய்த நிகழ்வில் இயக்குனர்கள் ராஜமவுலி, சுகுமார், கொரட்டலா சிவா ஆகியோருடன் பாகுபலி பட தயாரிப்பாளரான ஷோபு யார்லகடா, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நவீன் எர்னேனி உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் சிலரும் கலந்து கொண்டனர்.
ஆனால் இதிலும் ஆர்ஆர்ஆர் தயாரிப்பாளரான தனய்யா கலந்து கொள்ளவில்லை. ஆர்ஆர்ஆர் படக் குழுவினர்தான் தனய்யாவை புறக்கணித்து வருகிறார்கள் என்று சொல்லப்பட்ட நிலையில், தற்போது ஜூனியர் என்டிஆரும் தன் பங்கிற்கு அவரை புறக்கணித்து உள்ளாரோ என்று தெலுங்கு திரை உலகில் பலரும் பேச ஆரம்பித்துள்ளனர்.