துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
நடிகர் சூர்யா இயக்குனர் சிவா உடன் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகிறார். சூர்யாவின் 42 வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு கங்குவா என தலைப்பு வைத்துள்ளனர். ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். ஹிந்தி நடிகை திஷா பதானி சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். இருதினங்களுக்கு முன் படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
சிவா அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது : "இந்த படம் 1500 ஆண்டுகளுக்கு முன்பு நடக்கும் கற்பனையான கதைக்களம் கொண்ட படம். 'கங்குவா' எனும் பட தலைப்பிற்கு அர்த்தம் நெருப்பாய் இருக்கும் ஒரு கதாபாத்திரம் என்பது பொருள். இது என் கனவு திரைப்படம். இப்போது வெளிவந்த இந்த மோஷன் போஸ்டரில் காட்டப்பட்டுள்ள நாய், முகமூடி, குதிரை, கழுகு ஆகியவை இந்த படத்திற்கு முக்கியமானதாகும். இந்த படத்தில் அதிக அளவில் சி. ஜி காட்சிகள் இடம் பெற்றுள்ளது. 3டி வடிவில் இந்த படத்தை உருவாக்கி வருகிறோம்" என்றார்.