தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

'ஆர்ஆர்ஆர்' படத்திற்கு பிறகு ஜூனியர் என்டிஆர் தனது 30வது படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. கொரட்டலா சிவா இயக்குகிறார். யுவ சுதா ஆர்ட்சுடன் இணைந்து ஜூனியர் என்டிஆரின் தயாரிப்பு நிறுவனமான என்டிஆர் ஆர்ட்ஸ் தயாரிக்கிறது. ஜான்வி கபூர் இந்த படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார்.
தற்போது தேசிய விருது பெற்ற பாலிவுட் நடிகர் சைப் அலிகான் அதிகாரப்பூர்வமாக 'என்டிஆர் 30' படக்குழுவில் இணைந்துள்ளார். இந்தப் படம் மூலம் ஜூனியர் என்டிஆர் மற்றும் சைப் அலிகான் இருவரும் முதல் முறையாக இணைந்து நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார், அனிருத் இசை அமைக்கிறார். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 5ம் தேதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.