படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

மலையாள நடிகை மஞ்சு வாரியர் தமிழில் அசுரன் படத்தை தொடர்ந்து அடுத்ததாக அஜித்துடன் துணிவு என்கிற படத்தில் இணைந்து நடித்தார். அந்த படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் அஜித் மற்றும் அவரது நண்பர்கள் குழுவினருடன் சேர்ந்து வட மாநிலங்களில் கிட்டத்தட்ட 1000 கிலோமீட்டர் வரை பைக் பயணம் மேற்கொண்டார். அடுத்த முறை அஜித்துடன் இதுபோன்ற ஒரு பயணத்தில் கலந்து கொள்ளும்போது தானே இப்படி ஒரு பைக்கை ஓட்டிவிடும் அளவுக்கு தயாராக முடிவு செய்து கடந்த சில மாதங்களுக்கு ஓட்டுனர் உரிமத்திற்கு விண்ணப்பித்து பெற்றார்.
அதைத் தொடர்ந்து காஸ்ட்லியான பிஎம்டபிள்யூ பைக் ஒன்றையும் வாங்கினார் மஞ்சு வாரியர். தற்போது தான் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு இடைவேளையின்போது குறிப்பாக இரவு நேரங்களில் இந்த பைக்கை ஓட்டி பழகி வருகிறார் மஞ்சு வாரியர். பிரபல நகைச்சுவை நடிகர் சௌபின் சாகிர், பைக் ஓட்டுவதில் இவருக்கு உதவியாக இருந்து பயிற்சி கொடுத்து வருகிறார்.
இது குறித்த புகைப்படங்களை வெளியிட்டுள்ள மஞ்சு வாரியர் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளதுடன் பைக் ஓட்டும் போது தவறாமல் ஹெல்மெட் அணிந்து ஓட்டுங்கள் என்றும் தற்போது புகைப்படம் எடுப்பதற்காக நான் ஹெல்மெட் அணியாமல் இருக்கிறேன் அதனால் மன்னித்துக் கொள்ளுங்கள் என்றும் கூட ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.