தனுஷின் சகோதரிகளை இன்ஸ்டாகிராமில் பின்தொடரும் மிருணாள் தாக்கூர் | 'புஷ்பா 2' தியேட்டர் நெரிசல் விவகாரம்: மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் | தலைவன் தலைவி சக்சஸ் மீட் எப்போது | இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு வரும் அனுஷ்கா | முருகதாஸ், சிவகார்த்திகேயன் இரண்டு பேருக்கும் மதராஸி முக்கியம் | 'த காலர்' பிரிட்டிஷ் படத்தின் காப்பியா 'ஹவுஸ்மேட்ஸ்'? | 'ஐமேக்ஸ்' ரிலீஸ் இல்லாத 'கூலி': ரசிகர்கள் வருத்தம் | குழந்தைகளும் பார்க்கும் வகையிலான பேய்கதை | அரசியலில் இருந்து விலகிய பிறகும் விமர்சிக்கிறார்கள்: சிரஞ்சீவி பேச்சு | மதுரை மாநாடு நடப்பதென்ன... நடிகர், நடிகைகள் இணைகிறார்களா? |
பொதுவாகவே நமது தென்னிந்திய மொழிகளில் உருவாகி மிகப்பெரிய வரவேற்பு பெரும் படங்கள் கூட வெளி மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் பாலிவுட் படம் என்றே அழைக்கப்பட்டு வருகிறது. அப்படி கடந்த மாதம் நாட்டு நாட்டு பாடலுக்காக ஆஸ்கர் விருது பெற்ற ஆர்ஆர்ஆர் படத்தை அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் குறிப்பிடும்போது பாலிவுட் படம் என்று குறிப்பிட்டது தெலுங்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இந்தி படங்களை பாலிவுட் என்று அழைப்பதை கைவிட வேண்டும் என கூறியுள்ளார் இயக்குனர் மணிரத்னம். வரும் ஏப்ரல் 28ஆம் தேதி பொன்னியின் செல்வன் படம் வெளியாக இருப்பதை முன்னிட்டு அதன் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பிஸியாக கலந்து கொண்டு வரும் இயக்குனர் மணிரத்னம், சென்னையில் நடைபெற்ற சினிமா கருத்தரங்கம் ஒன்றிலும் கலந்து கொண்டு பேசியபோது இந்த கருத்தை ஒரு தீர்வாக முன் வைத்தார்.
அவரிடம் தென்னிந்திய படங்கள் பெரும்பாலும் பாலிவுட் படங்களாகவே வெளியில் கருதப்படுகின்றனவே என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த மணிரத்னம், “இந்தி திரையுலகம் தங்களை பாலிவுட் என்று அழைப்பதை நிறுத்திக்கொண்டால் மக்களும் இந்திய சினிமாவை பாலிவுட் என்று அழைப்பதை நிறுத்திக் கொள்வார்கள்” என்று கூறினார். இதே கருத்தரங்கில் பேசிய இயக்குனர் வெற்றிமாறனும், “எனக்கு பாலிவுட், கோலிவுட் என்கிற 'வுட்'டுகளில் நம்பிக்கை இல்லை. நாம் மொத்தமாக அனைத்தையுமே இந்திய சினிமா ஆக பார்க்க வேண்டும்” என்று கூறினார்.