'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் |

பிருத்விராஜ்க்கு ஜோடியாக அமலா பால் நடித்துள்ள மலையாள படம் ஆடு ஜீவிதம். பிரபல எழுத்தாளர் பென் யாமின் எழுதிய நாவலை மையமாக வைத்து இந்த படத்தை இயக்கி இருக்கிறார் பிளசி. கடன் தொல்லையால் அவதிப்படும் பிருத்விராஜ் அந்த கடனை அடைப்பதற்காக சவுதிக்கு செல்வதும், அங்கு ஆடு மேய்ப்பவராக மாறி அவர் சந்திக்கும் பிரச்னைகளை மையமாக கொண்ட கதையில் இந்த படம் உருவாகி இருக்கிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இந்த படத்தில் ரசூல் பூக்குட்டி சவுண்டு இஞ்சினியராக பணியாற்றி இருக்கிறார்.
சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி அதில் இடம்பெற்றிருந்த பிருத்விராஜ் அமலாபாலின் லிப்லாக் காட்சி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அது குறித்து அமலா பாலிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, ‛‛ஆடு ஜீவிதம் படத்தின் கதையை சொன்னபோது லிப்லாக் காட்சி இருப்பதை சொல்லிவிட்டார்கள். இந்த படத்தின் கதைக்கும் காட்சிக்கும் அது அவசியப் பட்டதால் நடிப்பதற்கு ஒத்துக் கொண்டேன். என்னை பொருத்தவரை கதைக்கு தேவைப்பட்டதால் ஆடை என்ற படத்தில் நிர்வாணமாக கூட நடித்தேன். கதைக்கு ஏற்ப நடிப்பதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. அதிலும் ஆடையே இல்லாமல் நடித்த எனக்கு லிப்லாக் காட்சியில் நடிப்பது எல்லாம் ஒரு விஷயமே இல்லை'' என்று கேசுவலாக பதில் கொடுத்து இருக்கிறார் அமலா பால்.