நடிகையின் ஆசையை நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின் | அனுஷ்காவின் ‛காட்டி' டிரைலர் வெளியீடு : ரிலீஸ் தேதியும் அறிவிப்பு | ரவி மோகனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஆர்யா | பராசக்தி படத்தில் நடிக்காதது ஏன் : லோகேஷ் கனகராஜ் விளக்கம் | ராம் சரண் படம் கைவிடப்பட்டது ஏன் : கவுதம் தின்னனூரி விளக்கம் | சிவகார்த்திகேயனின் மன அழுத்தத்தை போக்கும் பிள்ளைகள் | ‛கிங்டம்' படத்திற்கு எதிர்ப்பு : வருத்தம் தெரிவித்த படக்குழு | 23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் |
அறிவியல் தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்கேற்ப திரைப்படத் துறையும் மாறி வருகிறது. 35 எம்எம், 70 எம்எம், சினிமாஸ்கோப் உள்ளிட்ட திரை அளவுகளில் தியேட்டர்களில் சினிமாவைப் பார்த்தது ரசித்தது மாறி இன்று 'ஐமேக்ஸ்' திரை வரை வளர்ந்திருக்கிறது.
தற்போது நாம் சினிமாஸ்கோப் திரைகளைத்தான் அதிகம் பார்த்து வருகிறோம். 35 எம்எம், 70 எம்எம் ஆகியவை வழக்கொழிந்து போய்விட்டன. சினிமாஸ்கோப் திரையின் அளவு '2.35 : 1' என்ற புலன் விகிதத்தில் திரையிடப்படுகிறது. அதே சமயம் 'ஐமேக்ஸ்' திரையின் அளவு '1.45 : 1' என்ற புலன் விகிதத்தில் திரையிடப்படுகிறது. 70 எம்எம் திரையிலிருந்தே சற்றேக்குறைய மாறுபட்டதுதான் ஐமேக்ஸ் திரை.59 அடி உயரம், 79 அடி அகலம் கொண்டதாக இத்திரை இருக்கும். அதற்கேற்றபடி தியேட்டர்களையும் பிரம்மாண்டமாக வடிவமைக்க வேண்டும். வழக்கமான திரையிடலை ஐமேக்ஸ் திரையிடலுக்கேற்றபடி தொழில்நுட்ப ரீதியாகவும் மாற்ற வேண்டும்.
தமிழகத்தில் இதுவரையில் சென்னையில் மட்டுமே இரண்டு ஐ மேக்ஸ் தியேட்டர்கள் செயல்பட்டு வருகின்றன. சென்னை, வேளச்சேரியில் உள்ள மால் ஒன்றிலும், வடபழனியில் உள்ள மற்றொரு மால் ஒன்றிலும் ஐ மேக்ஸ் தியேட்டர்கள் உள்ளன. தற்போது மூன்றாவதாக கோயம்பத்தூரில் உள்ள மால் ஒன்றில் ஐமேக்ஸ் தியேட்டர் இன்று திறக்கப்பட்டுள்ளது. இத் தியேட்டரில் லேசர் டெக்னாலஜி, எபிக் வடிவ திரை ஆகியவை கூடுதல் சிறப்பம்சமாக சேர்க்கப்பட்டுள்ளது.
வரும் 28ம் தேதி முதல் அங்கு பொதுமக்களுக்கான திரையிடல் ஆரம்பமாக உள்ளது. 'பொன்னியின் செல்வன் 2' படத்தை கோவை நகர ரசிகர்கள் அந்த ஐமேக்ஸ் தியேட்டரில் கண்டுகளிக்கலாம்.