தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

பாலிவுட் நடிகை பூமிகா சாவ்லா. தமிழில் சில்லுனு ஒரு காதல், பத்ரி உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் சல்மான் கான் நடித்து சமீபத்தில் வெளியான 'சசி கா பாய் கசி கா ஜான்' படத்தில் நடித்துள்ளார். இப்படம் தமிழில் அஜித் குமார் நடிப்பில் வெளியான 'வீரம்' படத்தின் கதையைத் தழுவி எடுக்கப்பட்டது. இந்த படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பூமிகா சினிமாவில் ஆணாதிக்கம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது: நடிகைகளுக்கு முக்கியத்துவம் இல்லாத கமர்சியல் படங்களில் இப்போதும் நடிகர்களே ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். நடிகைகள் தொடர்ந்து பின்னுக்கு தள்ளப்பட்டு வருகிறார்கள். வயது முதிர்ந்தாலும் நடிகர்கள் ஹீரோக்களாக தொடர்ந்து நடிக்கிறார்கள். நடிகைகள் வயதுக்கு ஏற்ற வேடங்களில் மட்டுமே நடிக்க கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இந்த நிலையைத் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும்தான் மாற்ற வேண்டும். இப்போது வெப் சீரிஸ்களிலும், ஓடிடியிலும் இந்த நிலை மாறிக்கொண்டிருக்கிறது.
நடிகர்கள் தங்களைவிட மிகவும் வயது குறைந்த பெண்களுடன் ஜோடியாக நடிப்பது, ரொமான்ஸ் செய்வது கொஞ்சம் கூட நியாயம் இல்லை. நான் என் மகன் வயதில் இருப்பவர்களிடம் ரொமான்ஸ் செய்து நடித்தால் மக்கள் அதை ஏற்றுக் கொள்வார்களா? ஆனால், ஆண் நடிகர்கள் அதைச் செய்தால் மட்டும் ஏற்றுக் கொள்வது எந்த விதத்தில் நியாயம்.
சினிமாவில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் ஆண்கள் தங்களைவிடவும் மிகவும் வயது குறைந்த பெண்ணை திருமணம் செய்தால் ஏற்றுக் கொள்கிறார்கள். அதையே பெண் செய்தால் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். என்று பேசியுள்ளார்.