துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த 'பொன்னியின் செல்வன் 2' படத்தில் முன்னணி நடிகர்களே சில காட்சிகளில் வந்து சென்றதாக ஒரு குறை ரசிகர்களிடத்தில் இருக்கிறது. அதே சமயம் சில காட்சிகளில் வந்தாலும் யார் இவர்கள் என சிலர் வியக்க வைத்துள்ளார்கள்.
அந்த விதத்தில் இளம் குந்தவை ஆக நடித்தவரும், இளம் நந்தினி ஆக நடித்தவரும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்கள். இளம் நந்தினி ஆக நடித்தவர் யாரென்று ரசிகர்களுக்குத் தெரிந்த ஒன்றுதான். விக்ரம் நடித்த 'தெய்வத் திருமகள்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சாரா அர்ஜுன் தான் இளம் நந்தினி ஆக நடித்திருந்தார்.
அதுபோல 'இளம் குந்தவை' ஆக நடித்தவர் யார் என்று ரசிகர்கள் கூகுள் செய்ய ஆரம்பித்தனர். அவர்களுக்கு அந்த வேலையையும் வைக்காமல், “குட்டிக் குந்தவை', நம்ம நிலாப்பாப்பா மாதிரியே இருக்கு... என்று வியந்த நண்பர்களுக்கு... ஆம், அது நிலா பாப்பாதான்,” என்று பதிவிட்டுள்ளார் 'குட்டி குந்தவை'யின் அப்பா கவிதா பாரதி. நடிகரும், எழுத்தாளருமான கவிதா பாரதி, டிவி நடிகை கன்யா ஆகியோரது மகள் நிலா தான் இளம் குந்தவை ஆக நடித்திருப்பவர். சில காட்சிகளில் வந்தாலும் குந்தவைக்குரிய அந்த கம்பீரம், பார்வை என தனது நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார் நிலா.
தன் மகள் பற்றிய கவிதா பாரதியின் பதிவுக்கு ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.