மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
சமூக வலைத்தளங்களில் அதிக லைக்குகள், அதிகப் பதிவுகள், யு டியூப் தளத்தில் அதிகப் பார்வைகள், அதிக லைக்குகள் ஆகியவை தான் ஒரு புதிய பட அறிவிப்புக்கு ஆரம்ப கட்ட சாதனையாகப் பார்க்கப்படுகிறது. அந்த விதத்தில் விஜய், அஜித் ஆகியோரது படங்களைப் பற்றிய அறிவிப்புகள் வரும் போது அது பற்றிய தகவல்கள் சண்டைகள் மிகவும் 'உக்கிரமாக' இருக்கும்.
அஜித்தின் 62வது படமான 'விடாமுயற்சி' பற்றிய அறிவிப்பு இரண்டு தினங்களுக்கு முன்பு மே 1ம் தேதி வெளியானது. டுவிட்டர் தளத்தில் அந்தப் படம் பற்றிய பதிவுகள் 24 மணி நேரத்தில் 9 லட்சத்திற்கும் கீழான சாதனையை மட்டுமே எட்டியுள்ளது. இது சூர்யாவின் 'கங்குவா' படம் செய்த 9 லட்சத்திற்கும் கூடுதலான பதிவை விடவும் குறைவுதான்.
விஜய்யின் 'லியோ' படம் பற்றிய அறிவிப்பு வந்த போது அதன் பதிவு 24 மணி நேரத்தில் 12 லட்சமாக இருந்து புதிய சாதனையைப் படைத்தது. அவ்வளவும் விஜய் ரசிகர்களின் முயற்சிதான். அந்த முயற்சியை அஜித் ரசிகர்கள் 'விடாமுயற்சி' செய்து முறியடித்திருக்க வேண்டும். ஆனால், அந்த சாதனையை அஜித் பட அறிவிப்பு நெருங்கக் கூட முடியவில்லை. இதனால், டுவிட்டர் தளத்தில் விஜய்க்குதான் எப்போதும் ஆதரவு அதிகம் என அவரது ரசிகர்கள் இதையும் கொண்டாடி வருகிறார்கள்.