ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! |
சத்யராஜ் மற்றும் வசந்த் ரவி, ராஜீவ் மேனன் ஆகியோர் நடிக்கும் படம் ‛வெப்பன்'. இதன் படப்பிடிப்பு நடந்தபோது ஏற்பட்ட விபத்தில் குமார் என்ற லைட்மேன் உயிரிழந்தார். அவரது குடும்பத்திற்கு படத்தின் தயாரிப்பாளர் எம்.எஸ்.மன்சூர் 12 லட்சம் ரூபாய் நிதி வழங்கினார். பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, லைட்மேன் சங்கத் தலைவர் செந்தில் ஆகியோரின் முன்னிலையில் இந்த நிதி குமாரின் மனைவி ஜூலியட் உள்ளிட்ட குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது.
இதுகுறித்து தயாரிப்பாளர் மன்சூர் கூறும்போது “குமாரின் எதிர்பாராத மறைவு எனது குடும்பத்தில் ஒருவரை இழந்ததைப் போன்ற வேதனையைத் தந்துள்ளது. தன் வாழ்நாள் முழுவதையும் தன் தொழிலுக்காக இரவும் பகலும் செலவழித்த ஒருவரை இழந்துள்ளது மனதைக் கனக்கச் செய்கிறது. அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த இழப்பை யாராலும் ஈடுசெய்ய முடியாது. அவர்களுடைய குடும்பத்திற்கு நிவாரணம் கொடுப்பதன் மூலம் அவர்களுக்கு ஆறுதல் சொல்லுவதில் ஒரு சிறு பகுதியாக இருக்க விரும்பினேன்.
அதனால் ஒரு சிறிய பங்களிப்பைச் செய்தேன். குமார் என்றென்றும் என் பிரார்த்தனையில் இருப்பார். அவருடைய ஆன்மா சாந்தியடைய நான் தொடர்ந்து பிரார்த்தனை செய்வேன். மேலும் உறுதியான நம்பிக்கையுடனும், சக்தியுடனும் அவரது குடும்பத்தினர் நலமுடன் இருப்பதைக் காண விரும்புகிறேன். என்றார்.