‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? | லகான் கிராம மக்களுடன் அமர்ந்து ‛சிதாரே ஜமீன் பர்' படத்தை பார்த்த அமீர்கான் | பிளாஷ்பேக்: காட்சியும், கானமும் “நான் பாடும் பாடல்” | உழைக்கும் கரங்கள், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், பீஸ்ட் - ஞாயிறு திரைப்படங்கள் | சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் |
நடிகர் நாக சைதன்யா - நடிகை சமந்தா இருவரும் காதலித்து திருமணம் செய்து, பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இப்போது அவர் நடித்த கஸ்டடி படம் புரோமஷன் நிகழ்ச்சியில் தனது விவாகரத்து குறித்து அந்த பேட்டியில் கூறியுள்ளார். அதன்படி, "சமந்தா எப்பொழுதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். நாங்கள் இருவரும் பிரிந்து இரண்டு ஆண்டுகள் ஆகிறது. சட்டப்படி விவாகரத்து பெற்று ஓராண்டு ஆகிறது. நாங்கள் பிரிந்த பிறகு நான் சமந்தாவோடு சேர்ந்து வாழ்ந்த நாட்களை கவுரவிக்கிறேன்.
உண்மையில் சமந்தா மிகவும் நல்ல பெண். சமூக வலைத்தளங்களில் வந்த வதந்தி காரணமாகத்தான் எங்கள் இருவர் இடையே கருத்து வேறுபாடு ஆரம்பம் ஆனது. அது மெல்ல மெல்ல பெரிதாகி கடைசியில் பிரிந்து விட வேண்டிய நிலைமை வந்தது. முதலில் நான் அந்த வதந்தி செய்தியை கண்டுகொள்ளவில்லை. அதன்பிறகு நிலைமைகள் மாறிவிட்டன. நாங்கள் பிரிந்து விட்டாலும் ஒருவருக்கு ஒருவர் நல்ல மரியாதை வைத்துள்ளோம். சமூக வலைத்தளங்களில் எங்களின் கடந்த காலத்தில் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத மூன்றாவது நபரை இதற்குள் இழுத்து அவரை அவமரியாதை செய்தனர். என்ன நடந்தாலும் எல்லாம் நன்மைக்கே என நினைத்துக்கொள்கிறேன். இப்போது நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.