டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

தமிழ்நாடு சின்னத்திரை இயக்குனர்கள் சங்கம் தொடங்கி 23 ஆண்டுகள் ஆனதை தொடர்ந்து 'சிடி 23' என்ற பெயரில் பிரமாண்ட விழா நடத்தி கொண்டாட இருக்கிறார்கள். வருகிற ஜூன் 11ம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கும் இந்த விழாவை 6 மணி நேரத்திற்கு தொடர்ச்சியாக நடத்த இருக்கிறார்கள்.
இதுகுறித்து சங்கத்தின் தலைவர் தளபதி கூறும்போது “தமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர்கள் சங்கம் தொடங்கி 23 ஆண்டுகள் ஆவதை குறிக்கும் வகையில் சென்னையில் பிரமாண்ட விழாவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் திரைப்பட மற்றும் சின்னத்திரை துறைகளை சார்ந்த கலைஞர்கள் பங்குபெறும் கலை நிகழ்ச்சிகள் தொடர்ந்து 6 மணி நேரம் நடைபெறும்.
ஜூன் 11ம் தேதி நடைபெற உள்ள இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் சுறுசுறுப்பான முறையில் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மற்றும் செய்தி, மக்கள் தொடர்பு துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோரை நேரில் சந்தித்து விழாவுக்கு அழைக்க இருக்கிறோம்” என்றார்.