துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டு பிள்ளை என தொடர் வெற்றிகளை கொடுத்த பாண்டிராஜ் இயக்கத்தில் கடைசியாகப் சூர்யா நடித்து வெளிவந்த எதற்கும் துணிந்தவன் படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இதையடுத்து அவரின் அடுத்த பட அறிவிப்பில் தாமதம் நிலவுகிறது. பாண்டிராஜ் அறிமுகப்படுத்திய நடிகர் சிவகார்த்திகேயனே அவர் கதையில் நடிப்பதாக முதலில் தகவல் வந்தது. ஆனால் அவர் ஆர்வம் காட்டவில்லையாம். அவரை தொடர்ந்து நடிகர்கள் கார்த்தி, விஷால் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்றும் படம் கைகூடவில்லை என்கிறார்கள்.
இந்நிலையில் நடிகர் பாண்டிராஜை அழைத்து ஜெயம் ரவி என்னை வைத்து படம் இயக்குங்கள் நான் உங்களுக்கு படம் தருகிறேன் என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை ஜெயம் ரவியின் மாமியாரும், தயாரிப்பாளருமான சுஜாதா விஜயகுமார் அவரது ஹோம் மூவி மேக்கர்ஸ் மூலம் தயாரிக்கின்றார் என்று கூறப்படுகிறது.