வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

தெலுங்கு, ஹிந்தியில் அதிகமான படங்களில் நடித்துள்ள இலியானா, தமிழில் கேடி என்ற படத்தில் அறிமுகமானவர், அதன்பிறகு ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்த நண்பன் படத்தில் நடித்தார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஆன்ட்ரூவ் என்பவரை காதலித்து வந்த இலியானா அவருடன் லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்தார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார்.
அதையடுத்து நடிகை கைத்ரினா கைப்பின் சகோதரர் ஜெபாஸ்டியனை காதலித்து வருவதாக கூறப்பட்டது. டேட்டிங் சென்று வருவதோடு லிவிங் டுகெதர் வாழ்க்கையிலும் அவர்கள் ஈடுபட்டிருப்பதாக பாலிவுட்டில் செய்திகள் வெளியாகி வந்தன. என்றாலும் அந்த தகவலை இலியானா உறுதிப்படுத்தவில்லை.
சில மாதங்களுக்கு முன்பு தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை தெரிவித்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார் இலியானா. இன்னும் திருமணம் செய்து கொள்ளாத இலியானா தான் கர்ப்பமாக இருப்பதாக செய்தி வெளியிட்டதால், எப்போது உங்களுக்கு திருமணம் நடைபெற்றது? உங்களது கணவர் யார்? என்று பலரும் சோசியல் மீடியாவில் அவரிடத்தில் கேள்வி எழுப்பி வந்தார்கள். என்றாலும் அது குறித்த எந்த பதிலும் கொடுக்காத இலியானா, தற்போது கருப்பு நிற உடையில் தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ஏற்கனவே வெளியிட்ட அந்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.