தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
அவதார், அவென்ஜர் படங்கள் போன்று உலகம் முழுக்க அடுத்து எதிர்பார்க்கப்படும் ஹாலிவுட் படம் 'ஓப்பன் ஹெய்மர்'. இதனை கிறிஸ்டோபர் நோலன் இயக்கி உள்ளார். மெமன்டோ, தி ப்ரஸ்டீஜ், இன்செப்ஷன், இன்டர்ஸ்டெல்லர், டெனெட் உள்ளிட்ட உலக புகழ்பெற்ற படங்களை இயக்கியவர். இவரது படங்கள் பார்த்த உடன் பிடிக்காது, பார்க்க பார்க்கத்தான் பிடிக்கும், புரியும் என்பதுதான் இவருக்கான ஸ்பெஷல்.
தற்போது இவர் இயக்கி உள்ள 'ஓப்பன் ஹெய்மர்' என்பது அணுகுண்டு சோதனை பற்றிய படம். அணுகுண்டை கண்டுபிடிக்கும் விஞ்ஞானி அதன்பிறகு அது வெடித்தால் எத்தனை பேர் சாவார்கள் என யோசித்து அதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி தவிப்பது மாதிரியான கதை. இரண்டாம் உலகப் போரின்போது அணுகுண்டு தயாரிக்க உதவிய அமெரிக்க விஞ்ஞானி ஜே.ராபர்ட் ஒப்பன்ஹெய்மரைப் பற்றிய படம். இந்த படத்திற்காக போலியாக அணுகுண்டை வெடிக்கச் செய்து படமாக்கியபோது அது திருப்தி அளிக்காத நிலையில் அரசின் அனுமதியுடன் நிஜ அணுகுண்டை வெடிக்கச் செய்து படமாக்கியுள்ளார்.
இப்படத்தில் ஹாலிவுட் நடிகர் சிலியன் மர்பி நடிக்கிறார். அயர்ன்மேன் புகழ் ராபர்ட் டௌனி, எமிலி பிளன்ட், மேட் டேமன், ப்ளோரன்ஸ் நடித்துள்ளனர். இப்படம் வருகிற ஜூலை 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.