நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு |
'பர்மா, ஜாக்சன் துரை, ராஜா ரங்குஸ்கி' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பிவி தரணிதரன். 'ஜாக்சன் துரை' படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது இயக்கி வருகிறார். இந்நிலையில் டுவிட்டர் தளத்தில் கடும் கோபத்துடன் சில பதிவுகளை இட்டுள்ளார்.
“சாதி, செல்வாக்கு….ஒரு இயக்குனராக இருக்க வெட்கப்படுகிறேன். சாதி மற்றும் செல்வாக்கான ஆதரவு மட்டுமே தற்போதைய நிலையாக இருக்கிறது. எனது கனவுகளை நனவாக்க எனது ஐ.டி. பணியை விட்டு வந்தேன். ஆனால், இங்கு அரசியல் சக்தி மற்றும் செல்வாக்கு ஆகியவற்றால் மட்டுமே எல்லாம் நடக்கிறது. உங்க ஜாதி…… வெச்சு ஒரு கூந்தலும் பண்ண முடியாது….பாத்துக்கலாம் வாங்கடா, இப்படி ஏமாத்தி பொழக்கறதுக்கு… நாக்கப்புடிங்கிச் சாகலாம்..
கடந்த நான்கு வருடங்களாக நான் பிரச்சினைகளை சந்தித்து வருகிறேன். சீரிய அறிவுடன் என்னை நிரூபிக்க இங்கு வந்தேன். ஆனால், செல்வாக்கும், சாதியும் மட்டுமே இங்கு வேலை செய்கிறது. நான் உதவியற்றவனாக இருக்கிறேன்,” என வெறுப்புடனும், கோபத்துடனும் பதிவிட்டுள்ளார்.