தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் ஹாரிஸன் போர்ட். புதையலை தேடிச் செல்லும் 'இண்டியான ஜோன்ஸ்' படங்கள் மூலம் உலக புகழ்பெற்றவர். 1981ஆம் ஆண்டு ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் வெளியான இதன் முதல் பாகம் பெரும் வெற்றியடைந்தது. அந்த படத்தில் நாயகனான நடித்த ஹாரிஸன் போர்டுக்கு அப்போது 39 வயது. தற்போது 80 வயதாகும் அவர் இண்டியானா ஜோன்ஸ் படத்தின் 5வது பாகத்தில் நடித்துள்ளார். ஜேம்ஸ் மேங்கோல்ட் இயக்கியுள்ள இதுதான் இண்டியானா ஜோன்ஸ் படவரிசையின் இறுதி பாகமாகும். வருகிற ஜூன் 30ம் தேதி வெளிவருகிறது.
இந்த படம் தற்போது நடந்து வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. படத்தின் திரையீடு முடிந்ததும் பார்வையாளர்கள் அனைவரும் எழுந்து நின்று ஹாரிஸன் போர்டுக்கு ஐந்து நிமிடங்கள் தொடர்ந்து கைதட்டினர். பின்னர் அவரது சினிமா பங்களிப்பை கவுரவிக்கும் விதமாக கேன்ஸ் திரைப்பட விழாவின் மிக உயரிய 'தங்கப் பனை' விருது அவருக்கு வழங்கப்பட்டது.
விழாவில் ஹாரிஸன் போர்டு பேசியதாவது: நான் மிகவும் நெகிழ்ந்து போயிருக்கிறேன். நாம் சாகும்போது நாம் வாழ்ந்த வாழ்க்கை நம் கண் முன்னே வரும் என்று சொல்வார்கள். இப்போது என் வாழ்க்கை என் கண்முன்னால் நிழலாடுகிறது. என் வாழ்க்கை முழுவதும் அல்ல. வாழ்க்கையில் மிகச்சிறந்த பகுதி. என்னுடைய அன்பான மனைவி கலிஸ்டா ப்ளோக்ஹார்ட்டால் தான் என் வாழ்க்கை சாத்தியமானது. அவர் என் கனவு மற்றும் லட்சியத்துக்கு ஆதரவாக நின்றார். நான் அவருக்கு நன்றிக் கடன்பட்டிருக்கிறேன். ரசிகர்களாகிய உங்களையும் நான் மிகவும் நேசிக்கிறேன். நீங்கள்தான் என் வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றினீர்கள். அதற்கும் நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.
இவ்வாறு ஹாரிஸன் போர்டு கூறினார்.
இண்டியான ஜோன்ஸ் 5ம் பாகம்தான் எனது கடைசி படம் என்று ஹாரிசன் போர்ட் ஏற்கெனவே அறிவித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.