‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? | லகான் கிராம மக்களுடன் அமர்ந்து ‛சிதாரே ஜமீன் பர்' படத்தை பார்த்த அமீர்கான் | பிளாஷ்பேக்: காட்சியும், கானமும் “நான் பாடும் பாடல்” | உழைக்கும் கரங்கள், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், பீஸ்ட் - ஞாயிறு திரைப்படங்கள் | சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் |
தெலுங்கு சினிமாவில் சீனியர் இயக்குனர்களில் ஒருவரான கே.வாசு உடல்நல குறைவால் நேற்று முன்தினம் காலமானார். 1978ல் முதன் முறையாக இயக்குனராக பிரணம் கரிது என்கிற படத்தின் மூலம் அடி எடுத்து வைத்த கே.வாசு அந்த படத்தில் தான் முதன்முதலாக நடிகர் சிரஞ்சீவியையும் திரை உலகிற்கு அறிமுகப்படுத்தினார். சிரஞ்சீவியின் திறமையை வெளிக்கொண்டு வந்த அந்த படம், இயக்குனராக கே.வாசுவுக்கும் புதிய பாதை போட்டு தந்தது. அது மட்டுமல்ல, இவர் ஏற்கனவே தெலுங்கு திரையுலகில் புகழ்பெற்ற இயக்குனர் பிரத்தியகர்மாவின் மகனும் இயக்குனர் ஹேமம்பாரதர ராவின் சகோதரரும் ஆவார்.
கடந்த சில நாட்களாகவே சிறுநீரக பாதிப்பால் பாதிக்கப்பட்டிருந்த இவர் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்த நிலையில் நேற்று காலமானார். தெலுங்கு திரை உலகத்தை சேர்ந்த பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனர் மறைவுக்கு தனது சோசியல் மீடியா பக்கத்தில் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார் சிரஞ்சீவி. இதில் அவர் கூறும்போது, “மூத்த இயக்குனர் கே.வாசு. அவர் இப்போது இல்லை என்ற செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. என் திரையுலக பயணத்தின் ஆரம்ப நாட்களில் நான் செய்த பிராணம் கரிது, தொடடோங்காலு, அல்லுல்லு அண்ணுரு, கொத்தலா ராயுடு ஆகிய படங்களை இயக்கியவர். அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று கூறியுள்ளார்.