தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

ஓம் ராவத் இயக்கத்தில், பிரபாஸ், கிரித்தி சனோன், சைப் அலிகான் மற்றும் பலர் நடிக்கும் 'ஆதிபுருஷ்' படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்ச்சி நேற்று முன்தினம் திருப்பதியில் நடைபெற்றது. அன்றைய தினம் காலையில் படத்தின் கதாநாயகன் பிரபாஸும், நேற்று காலையில் படத்தின் கதாநாயகி கிரித்தி சனோன், இயக்குனர் ஓம் ராவத் ஆகியோர் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழிபட்டார்கள்.
நேற்று சாமி தரிசனம் செய்த பிறகு கோயிலை விட்டு வெளியில் வந்தபின் கிரித்தி சனோன் கிளம்பும் போது அவருக்கு முத்தம் கொடுத்து வழியனுப்பி வைத்தார் இயக்குனர் ஓம் ராவத். பாஜக மாநில செயலாளர் ரமேஷ் நாயுடு நாகோத்து இதற்குக் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.
திருப்பதி வெங்கடேஸ்வர சுவாமி கோயிலுக்கு முன்பாக இப்படி முத்தமிடுவது, கட்டிக் கொள்வது என பொது இடத்தில் உங்களது பாசத்தைக் காட்டிக்கொள்வது ஏற்றுக் கொள்ள முடியாதது, மரியாதை குறைவானது,” எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அதன்பிறகு அந்த டுவிட்டர் பதிவை அவர் 'டெலிட்' செய்துவிட்டார். இருந்தாலும் பலர் ஓம் ராவத் அப்படி நடந்து கொண்டதற்கு தங்களது எதிர்ப்புகளைத் தெரிவித்துள்ளனர்.