ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
துணை நடிகர் பிரபு என்பவர் புற்றுநோயால் மரணம் அடைந்தார். அவரின் இறுதிச்சடங்கை இசையமைப்பாளர் இமான் செய்தார்.
தமிழில் தனுஷ் நடித்த ‛படிக்காதவன்' படத்தில் அவரது சகோதரியை மாப்பிள்ளை பார்க்க ‛விக்' வைத்து வரும் கேரக்டரில் நடித்தவர் பிரபு. இந்தப்படம் தவிர்த்து பல படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர், அதற்கான சிகிச்சை எடுத்து வந்தார். இவரது சிகிச்சைக்கு இசையமைப்பாளர் இமான் உள்ளிட்ட சிலர் உதவி வந்தனர். இந்நிலையில் நோயின் தாக்கம் தீவிரமானதால் மரணம் அடைந்தார்.
பிரபுவின் மறைவு செய்தி கேட்ட இசையமைப்பாளர் இமான், அவர் ஆதரவின்றி இருப்பதை உணர்ந்து பிரபுவிற்கு இமான் முன்னின்று அனைத்து இறுதிச்சடங்குகளையும் செய்ததோடு அவரே கொள்ளியும் வைத்தார். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. மேலும் இமானின் இந்த நெகிழ்ச்சி செயலை அனைவரும் பாராட்டி உள்ளர்.
பிரபு மறைவு பற்றி இமான் வெளியிட்ட பதிவில், ‛‛பிரபுவிற்கு நான்காம் நிலை புற்றுநோய். மருத்துவர்கள் தங்களது சிறப்பான சிகிச்சையை கொடுத்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை. அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்'' என குறிப்பிட்டுள்ளார்.