தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
கன்னட திரைப்பட நடிகையான ராதிகா ப்ரீத்தி, தமிழ் சின்னத்திரையில் பூவே உனக்காக சீரியலின் மூலம் அறிமுகமானார். பூவரசி என்ற கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்ட அவர், சீரியலை விட்டு திடீரென விலகினார். தொடர்ந்து அவர் படத்தில் நடிக்க வாய்ப்பு தேடிக் கொண்டிருப்பதாகவும், அதனால் தான் சீரியல்களில் இனி நடிக்க மாட்டேன் என்று கூறியதாகவும் செய்திகள் வெளியானது. இந்நிலையில், ராதிகா ப்ரீத்தி தற்போது நடிகர் சசிகுமார் நடிக்கும் புதிய படத்தில் ஹீரோயினாக நடிக்க கமிட்டாகியிருக்கிறார். சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு சென்று முன்னணி ஹீரோயின்களாக வலம் வரும் ப்ரியா பவானி சங்கர், வாணி போஜன் வரிசையில் ராதிகா ப்ரீத்தியும் இடம்பெற வேண்டுமென ரசிகர்கள் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.