தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

கரண், வடிவேலு, நடித்த 'காத்தவராயன்', கதிர், ஹனி ரோஸ் நடித்த 'காந்தர்வன்', கஸ்தூரி நடித்த 'இ.பி.கோ 302' போன்ற படங்களை இயக்கிய சலங்கை துரை. தற்போது இவர் இயக்கி உள்ள படம் 'கடத்தல்'. இந்த படத்தின் நாயகனாக எம்.ஆர்.தாமோதர் அறிமுகமாகிறார். கதாநாயகிகளாக விதிஷா, ரியா நடிக்கிறார்கள். மற்றும் சுதா, நிழல்கள் ரவி, சிங்கம் புலி, தமிழ்வாணன், ஜெயச்சந்திரன், ரவிகாந்த், ஆதி வெங்கடாச்சலம், சபாபதி, சந்தோஷ், மோகன் ரெட்டி, மாஸ்டர் தருண், பிரவீன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். ராஜ்செல்வா ஒளிப்பதிவு செய்கிறார், எம்.ஸ்ரீகாந்த் இயக்குகிறார்.
படம் பற்றி இயக்குனர் சலங்கை துரை கூறியதாவது: சமீபத்தில் பரபரப்பாக பேசப்பட்ட ஒரு கடத்தல் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு காமெடி மற்றும் கிரைம் திரில்லர் திரைப்படமாக இதை உருவாக்கி இருக்கிறோம். அது எந்த சம்பவம் என்பதை தற்போது கூற இயலவில்லை. படம் வெளிவந்ததும் தெரியும். கூடா நட்பு கேடாய் முடியும் என்பதற்கு இக்கால இளைஞர்களே எடுத்துக்காட்டு. தாய், தந்தையர் எவ்வளவோ சொல்லியும் தவறான நண்பர்களுடன் சேர்ந்து தவறான செயல்களில் ஈடுபட்டு வாழ்க்கையை தொலைத்து விடுகிறார்கள். அப்படி தவறான நட்பால் தாயை மீறி செயல்படும் ஒரு இளைஞனின் கதை இது.
இன்றைய இளைய தலை முறையினருக்கு இந்த படம் நிச்சயம் ஒரு பாடமாக இருக்கும். படப்பிடிப்பு குற்றாலம், தென்காசி, திருநெல்வேலி, மதுரை, ஒசூர், சென்னை போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது. படம் ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. என்கிறார் இயக்குனர் சலங்கை துரை.