வேட்பு மனுவை நிராகரித்த தயாரிப்பாளர் சங்கம் ; நீதிமன்றத்தை நாடும் பெண் தயாரிப்பாளர் | இந்த ஆட்களை எல்லாம் நிச்சயமாக எல்சியுவில் சேர்க்க மாட்டேன் ; லோகேஷ் கனகராஜ் திட்டவட்டம் | பிளாஷ்பேக்: திறமையான திரைக்கதை, திகைக்க வைக்கும் நடிப்பால் வென்று காட்டிய “தெய்வமகன்” | திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் |
பிரபல இயக்குனர் பிரியதர்ஷன், நடிகை லிஸி ஆகியோரின் மகள் கல்யாணி. மலையாள படத்தில் அறிமுகமான கல்யாணி தமிழில் 'ஹீரோ' படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்தார். சிம்பு ஜோடியாக மாநாடு படத்திலும் நடித் திருக்கிறார். தற்போது ஜோஷி இயக்கத்தில் மலையாளத்தில் தயாராகி வரும் 'ஆண்டனி' என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார். இதில் ஜோஜு ஜார்ஜ், செம்பன் வினோத் ஜொஸ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
கடந்த மே மாதம் தொடங்கிய இதன் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. படத்துக்காக சண்டை காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. டூப் போடாமல் கல்யாணி பிரியதர்ஷன் நடித்தார். அப்போது அவருக்கு கையில் காயம் ஏற்பட்டது. இதுபற்றி வீடியோ வெளியிட்டுள்ள அவர், “சண்டைக் காட்சிகள் உடல் பலவீனமானவர்களுக்கு அல்ல” என்று தெரிவித்துள்ளார்.