தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா |
சமூக வலைத்தளங்களில் நடிகர்கள், நடிகைகள், சினிமா பிரபலங்கள் பலரும் கணக்குகளை வைத்திருக்கிறார்கள். அவற்றில் சிலவற்றை சம்பந்தப்பட்டவர்கள் நேரடியாகப் பதிவிடாமல் அதற்கான வேலைகளைச் செய்வதற்க 'அட்மின்' என சிலரை வைத்து வேலை வாங்குவார்கள். அந்தக் காலத்தில் ரசிகர்கள் எழுதும் கடிதங்களைப் படித்துப் பார்க்காமல், நடிகர்களின் உதவியாளர்களே அவற்றிற்கு பதில் கடிதம் எழுதி அனுப்புவார்கள். அது போலத்தான் இந்தக் காலத்தில் இந்த சமூக வலைத்தள 'அட்மின்'களும் வேலை செய்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்துவிட்ட சிவகார்த்திகேயன் தற்போது அவருடைய டுவிட்டர் கணக்கிற்கு அட்மின்--ஐ நியமித்துள்ளார். அவரது கணக்கின் சுயவிவரத்தில் தற்போது ,“எஸ்கே குழுவினர் நிர்வகிக்கும் அதிகாரப்பூர்வ கணக்கு,” என மாற்றப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'மாவீரன்' படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்வு ஜுலை 2ல் நடைபெற உள்ள நிலையில் இந்த திடீர் மாற்றம் ஏன் என்று தெரியவில்லை.
கடந்த ஏப்ரல் மாதம் 30ம் தேதி, “எனது அன்பான சகோதர சகோதரிகளே, டுவிட்டரிலிருந்து சில காலம் விலகி உள்ளேன், சீக்கிரமே திரும்பி வருவேன், கவனமாக இருங்கள். படங்கள் பற்றிய அப்டேட்களை எனது குழுவினர் இங்கு பகிர்வார்கள்,” எனத் தெரிவித்திருந்தார்.
தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் புதிய படத்தில் நடித்து வருவதால் இந்த தற்காலிக விலகல் என்றார்கள். 'மாவீரன்' படம் இன்னும் 20 நாட்களில் வெளியாக உள்ள நிலையில் அப்போது கூட சிவகார்த்திகேயன் டுவிட்டர் பக்கம் வருவாரா அல்லது விலகியே இருப்பாரா ?.