துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
தெரு நாய்கள், படித்தவுடன் கிழித்து விடவும், கல்தா படங்களை இயக்கிய ஹரி உத்ரா இயக்கி உள்ள புதிய படம் வில் வித்த. இதில் அருண் மைக்கேல் டேனியல், ஆராத்யா, ஜானகி, வைஷ்ணவி, குணா, எஸ்.எம்.டி.கருணாநிதி, கெழுவை சுரேஷ் குமார் நடித்துள்ளனர். சிவகுமார் கணேஷ் ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஜே.அலி மிர்சாக் இசை அமைத்துள்ளார்.
இப்படம் குறித்து இயக்குனர் ஹரி உத்ரா கூறியதாவது: உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில், சைக்கோ திரில்லர் கதையுடன் 'வில் வித்த' படம் உருவாகி உள்ளது. இதில், ஹெல்த் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றிய அருண் மைக்கேல் டேனியல், கலையார்வம் காரணமாக அந்தப்பணியை ராஜினாமா செய்துவிட்டு, இதில் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். மன்னார்குடி, தஞ்சாவூர், கும்பகோணம், ராமநாதபுரம், பரமக்குடி போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. வரும் 7ம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது.