'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் |

யு டியூப் தளங்களில் எந்த டீசருக்கு, டிரைலருக்கு அதிகப் பார்வைகள் கிடைத்தது, அதிக லைக்குகள் கிடைத்தது என்பது மட்டும் நடிகர்களின் ரசிகர்களால் கொண்டாடப்படுவதில்லை. சமூக வலைத்தளங்களில் ஏதாவது சாதனை படைத்தால் கூட அதைக் கொண்டாடி வருகிறார்கள்.
அந்த வகையில் நேற்று வெளியான, தனுஷ் நடிக்க அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'கேப்டன் மில்லர்' படத்தின் முதல் பார்வை தனுஷ் படங்களில் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளது. அவர் நடித்து இதற்கு முன்பு வெளியான 'கர்ணன்' படத்தின் முதல் பார்வை 24 மணி நேரத்தில் 80 ஆயிரம் லைக்குகளைப் பெற்றது. நேற்று வெளியான 'கேப்டன் மில்லர்' படத்தின் முதல் பார்வை, தனுஷின் டுவிட்டர் கணக்கில், 20 மணி நேரத்திலேயே 97 ஆயிரம் லைக்குகளைக் கடந்துள்ளது. 24 மணி நேரம் முடிய இன்னும் நேரம் உள்ள நிலையில் அந்த லைக்குகளின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகலாம்.
தமிழ் சினிமாவில் டுவிட்டர் தளத்தில் அதிக லைக்குகளைப் பெற்ற முதல் பார்வை என்ற சாதனையை விஜய்யின் 'லியோ' போஸ்டர் படைத்தது. விஜய்யின் டுவிட்டர் தளத்தில் பதிவிடப்பட்ட அப்படத்தின் முதல் பார்வைக்கு 24 மணி நேரத்தில் 2,95,00 லைக்குகள் கிடைத்தது. கடந்த ஜுன் மாதம் 22ம் தேதி வெளியான அந்த போஸ்டர் தற்போது 3,19,000 லைக்குகளைக் கடந்துள்ளது.